பணம் ஆன்லைனில் எவ்வாறு சம்பாதிப்பது?

அறிமுகம்

முதலில், இந்த உலகில் மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் அவசியமானதாகும். இன்றைய நாட்களில் இந்த அடிப்படை தேவைகளை பெறுவதற்கு பணம் என்ற மூலதனம் அவசியமானதாகும். பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. பணியாளராக செல்வது, சுய தொழில் புரிவது, பிஸ்னஸ் தொடங்குவது, ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்டுவது என பட்டியலிட்டு கொண்டே போகலாம். இவை அனைத்திலுமே ஸ்மார்ட் வொர்க் மற்றும் ஹார்ட் வொர்க் என இரண்டுமே கலந்திருக்கும். ஹார்ட் வொர்க் செய்வதைத் தவிர்த்து ஸ்மார்ட் வொர்க் செய்தால் நாம் மேலும் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். ஸ்மார்ட் வொர்க் என்பது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு இடங்களிலும் தேவைப்படும். ஆன்லைனில் ஸ்மார்ட் வொர்க் செய்து மாதத்திற்கு இலட்சம் ரூபாய் கணக்கில் இலாபம் பெறுபவர்கள் உள்ளனர். அதற்கு தேவை நல்ல வருமானம் தரக்கூடிய வழியை தேர்வு செய்வது. மற்றும் அதில் இருக்கும் நுணுக்கங்கள், உத்திகள் பற்றிய புரிதல். அந்த வகையில், இந்த பதிவில் நான் வருமானம் பெறும் சில ஆன்லைன் வேலைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

1. யூட்யூப் மூலம் எவ்வாறு பணம் ஈட்டுவது?

இன்றைய நாட்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யூட்யூப் மூலம் பல தகவல்களை தெரிந்து கொள்கிறோம். எனவே ஆன்லைனில் வருமானம் ஈட்ட யூட்யூப் ஒரு சிறந்த தளமாகும். நமக்கு தெரிந்த அறிவு சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் பற்றிய தகவல்கள் என அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவதற்கு பெயர் தான் விளாகிங். உதாரணமாக நாம் ஒரு சுய தொழில் செய்கிறோம் என வைத்துக் கொள்வோம். நம்முடைய தொழில் பற்றிய தகவல்கள், அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வாறு தொடங்குவது போன்ற தகவல்கள் பார்வையாளர்களுக்கு தேவைப்படும். அதைப் பற்றி தேடும் பார்வையாளர்கள் நமது வீடியோக்களை பார்ப்பது மற்றும் சப்ஸ்க்ரைப் செய்வது போன்றவற்றால் நம்முடைய வருமானம் அதிகரிக்கும். கேட்ஜட் ரிவ்யூ, பயணம் செய்யும் வீடியோக்கள், வீடியோ கேமிங், கல்வி சார்ந்த வீடியோக்கள் என பல வகைகளில் வீடியோக்கள் பண்ணலாம். அது மட்டுமின்றி யூட்யூப் பார்ட்னர் ஏட்ஸ் மூலம் விளம்பரங்களுக்கு தனி வருமானம் உண்டு.

தேவையானவை

  • யூட்யூப் உள்ளே நுழைவதற்கு நமக்கு முதலில் தேவை ஒரு மெயில் ஐடி. இதனை கூகுள் மூலம் உருவாக்கிக் கொள்ளலாம்.
  • இரண்டாவதாக யூட்யூப் சேனல் ஒன்று உருவாக்க வேண்டும். டிரெண்டாக மற்றும் தனித்துவமாக உள்ள பெயர் கொண்டு சேனல் தொடங்கலாம்.
  • மூன்றாவதாக தரமான கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அவசியமானது. நம்முடைய வீடியோக்கள் சற்று தரமானதாக இருந்தால் பார்வையாளர்களை எளிதாக கவர முடியும்.
  • நான்காவதாக எடிட்டிங் பணிகள். இன்றைய நாட்களில் எடிட்டிங் மென்பொருள்கள் பல இலவசமாக உள்ளன. சிறப்பான எடிட்டிங் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
  • இறுதியாக யூட்யூப் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெறுவதற்கு ஒரு வங்கி கணக்கு.

2. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது விளம்பரங்கள் செய்ய உதவும் ஒரு ஆன்லைன் கருவியாகும். புரியும் வகையில் கூற வேண்டும் என்றால் ஒருவருடைய வணிகம், பொருட்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் விளம்பர படுத்துவது ஆகும். உதாரணமாக நான் ஒரு பேக்கரி அல்லது கேக் ஷாப் தொடங்கி இருப்பதாக வைத்துக்கொள்வோம். நாம் தொடங்கியது நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியும். பெரும்பாலான மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் விளம்பரப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நம் கடையில் என்னவெல்லாம் உள்ளது, விலை, கடை அமைந்துள்ள இடம் போன்ற தகவல்களை சமூக ஊடகங்கள் மற்றும் கூகுள் மூலம் விளம்பரம் செய்வது மக்களிடையே எளிதாக சென்றடையும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி படிப்பதற்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. விளம்பரங்கள் தயாரிப்பது, சமூக ஊடகங்கள் மேலாண்மை, வெப்சைட் மேலாண்மை, கன்டன்ட் ரைட்டிங், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உருவாக்குதல் போன்றவை டிஜிட்டல் மார்க்கெட்டிங் இல் முக்கிய வேலைகள் ஆகும்.

தேவையானவை

  • சிறந்த எடிட்டிங் மற்றும் விளம்பரங்கள் தயாரிப்பதில் தனித்துவமான பரிணாமம் அதிகம் தேவை.
  • தேடு பொறி தேர்வு முறை, தேடு பொறி வார்த்தை, வேர்ட்பிரஸ், வெப்சைட் டிசைனிங் என அனைத்தையும் கையாளும் திறன் மிகவும் அவசியம்.
  • சமூக ஊடகங்களை முறையாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.

3. பிளாக்கிங் மூலம் பணம் ஈட்டுவது எப்படி?

பிளாக்கிங் என்பதற்கு மற்றொரு பெயர் கன்டன்ட் ரைட்டிங் ஆகும். பிளாக்கிங் என்பது கதைகள், ஆர்டிகல்ஸ், தகவல்கள் மற்றும் சுய அனுபவம் என அனைத்தையும் எழுத்து வடிவில் ஒரு தொகுப்பாக உருவாக்குவது ஆகும். பெரும்பாலான மக்கள் யூட்யூப் பயன்படுத்தினாலும் கூட, புத்தகம் மற்றும் வலைப்பதிவுகளை வாசிப்பதற்கு என தனி பார்வையாளர்கள் உள்ளனர். புத்தகங்கள் வாசிப்பது மனதிற்கு இதமளிக்கும் மற்றும் அமைதியையும் தருகிறது. புத்தகங்களை நாம் எப்போதும் கையில் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. ஆனால் மொபைல் எப்பொழுதும் நம் கைகளில் இருக்கும். பிளாக்கிங் மூலம் இ- புத்தகங்களை ஆன்லைனில் படிக்க முடியும். இதன் அடிப்படையில் வாசகர்களை கவர்வது மட்டுமின்றி பணமும் சம்பாதிக்க முடியும். சுய பராமரிப்பு மற்றும் மன ஆரோக்கியம், பிஸ்னஸ், பங்கு சந்தை, வீட்டு பராமரிப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்பம், கேமிங் போன்றவற்றை கருவாக கொண்ட வலைப்பதிவுகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நம்முடைய வலைப்பதிவுகளை வாசகர்கள் வாசிப்பது மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும். அது மட்டுமின்றி கூகுள் ஆட்சென்ஸ் மூலம் விளம்பரங்களில் இருந்தும் பணம் ஈட்ட முடியும். நம்முடைய வெப்சைட்டில் இருந்து மார்க்கெட்டிங் செய்வது மூலமாகவும் வருமானம் பெற முடியும்.

தேவையானவை

  • மொபைல் அல்லது கணினி, கன்டன்ட் ரைட்டிங் செய்வதற்கு எது நமக்கு சாதகமாக உள்ளதோ அதைப் பயன்படுத்தி வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.
  • வலைப்பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்களை காப்பிரைட் உடைய வலைத்தளங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
  • நாம் உருவாக்கும் கன்டன்ட் அனைத்தும் ஏஐ பயன்படுத்தாமல் தனித்துவமாகவும், உயர்தரமானதாகவும் இருக்க வேண்டும்.
  • மேற்கூறிய நிபந்தனைகள் அடிப்படையில் நம்முடைய வலைப்பதிவுகள் இருந்தால் ஆட்சென்ஸ் நியமனம் விரைவாக கிடைக்கும்.

4. கற்பித்தல் வாயிலாக பணம் ஈட்டுதல்

கற்பதற்கு வயது தடையில்லை என்கிற ஒரு வாசகம் உண்டு. அதற்கேற்ப மக்கள் கற்றுக் கொள்வதில் பெரும் ஆர்வமாக உள்ளனர். அதற்காக நல்ல திறமை மற்றும் அனுபவமுள்ள ஆசிரியர்களை தேடுகின்றனர். பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ள விரும்புகின்றனர். ஏனென்றால் அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பிஸ்னஸ் செய்வோர் என அனைவரும் அவர்களின் அன்றாட பணிகளை தவிர்க்க முடியாது. அவர்களின் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் கற்றுக் கொள்ள நினைப்பர். ஆனால் அந்த நேரத்தில் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அது மட்டுமின்றி பணியாற்றும் இடத்தில் இருந்து கல்வி நிறுவனத்துக்கு சென்று கற்பது கடினம். எனவே அவர்கள் ஆன்லைன் ஆசிரியர்களை அதிகமாக தேடுகின்றனர். இசை, கணிதம், கணினி, பங்கு சந்தை, மொழி வகுப்புகள் என நமக்கு எந்த துறையில் அனுபவம் மற்றும் நிபுணர்களாக இருக்கிறோம் என்பதை ஆன்லைனில் பதிவிட வேண்டும். ஃப்ரீலேன்சிங் என்ற தளத்தில் பதிவிடுவது மேலும் நமக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்க ஏதுவாக இருக்கும். சிறப்பான கற்பித்தல் உங்களின் தரத்தை மற்றும் வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்கும். நம்முடைய அன்றாட வேலைகளை முடித்து விட்டு மீதமுள்ள நேரத்தில் வகுப்புகள் எடுப்பது நமக்கும் கடினமாக இருக்காது.

தேவையானவை

  • தரமான லேப்டாப் மற்றும் தெளிவாக ஒலிக்கும் ஒலிப்பெருக்கி (மைக்). இவை இரண்டும் தான் வீடியோ மற்றும் நாம் பேசுவதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
  • நாம் கற்பிக்கும் துறையில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் எவ்வாறு எளிதாக மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்க வேண்டும் என்பவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
  • நம்மிடம் கற்றுக் கொள்பவர்கள் நம்மைவிட வயதில் பெரியவர்களாக கூட இருக்கலாம், எனவே பணிவான குணம் மற்றும் சகிப்புத்தன்மை அவசியம்.
  • மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த எடுத்துக்காட்டுகள் கூறி கற்பிப்பது மாணவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள வழிவகுக்கும்.

5. எவ்வாறு பங்கு சந்தையில் பணம் ஈட்டுவது?

இந்த பதிவில் நான் பங்கு சந்தையை ஏன் இறுதியாக கூறுகிறேன் என்பது பலருக்கும் தெரிந்து இருக்காது. ஏனென்றால் நாம் தினசரி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் விளம்பரங்களில் பல பங்கு சந்தை செயலிகளைப் பார்க்கிறோம். இவை அனைத்தும் பங்கு சந்தையில் நாம் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. பங்கு சந்தை என்பது மிகப்பெரிய கடல் போன்றது. பங்கு சந்தை சார்ந்த முறையான பயிற்சி மற்றும் அறிவு இல்லாமல் தொடங்குவது, நீச்சல் தெரியாமல் கடலில் இறங்குவது போன்றது. இது என்னுடைய அனுபவம், அடிப்படையான சில தகவல்களை தெரிந்து கொண்டு சிறிய முதலீட்டில் இருந்து தொடங்கலாம் என்று 1000 ரூபாய் முதலீடு செய்தேன். குறைந்த விலையில் இருந்த சில பங்குகளை வாங்கினேன். நான் வாங்கிய பங்கு சற்று விலை கூடிய பின்னர் அதை விற்பனை செய்தேன். ஆனால் என்னுடைய முழு இலாபத்தை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நான் பயன்படுத்திய செயலிக்கு ஒரு கட்டணம், வர்த்தக கட்டணம் போன்ற கட்டணங்கள் போக மீதமுள்ள இலாபம் தான் எனக்கு கிடைத்தது. வர்த்தகம் (டிரேடிங்), ஃபிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட்ஸ், எஸ்ஐபி, டிஜிட்டல் கோல்டு, பத்திரங்கள் என பங்கு சந்தையில் பல பகுதிகள் உள்ளன. இதில் எது நமக்கு சிறந்தது என்று ஆராய்ந்து பின்னர் பங்கு சந்தையில் முதலீடு செய்வது சிறந்தது. இந்த அடிப்படை அறிவு இல்லாமல் முதலீடு செய்வது நஷ்டத்தை உண்டாக்கும்.

தேவையானவை

  • பங்கு சந்தையில் இலாபம் ஈட்ட வேண்டும் என்றால் முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய கல்வி நிறுவனங்கள் பங்கு சந்தை பயிற்சி அளிக்கின்றன. முதல் தேவை அறிவு மற்றும் பயிற்சி.
  • இரண்டாவதாக டீமேட் அக்கவுண்ட். பங்கு சந்தையில் நுழைவதற்கு டீமேட் அக்கவுண்ட் அவசியம், நம்முடைய இலாபம், நஷ்டம், போர்ட்ஃபோலியோ, பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது என அனைத்தையும் டீமேட் அக்கவுண்ட் மூலமாக தான் நாம் செய்ய முடியும்.
  • மூன்றாவதாக லேப்டாப் அல்லது மொபைல். இன்றைய நாட்களில் உலகம் ஆன்லைன் மையமாக உள்ளது. பங்கு சந்தையும் முழுமையாக ஆன்லைன் வடிவில் தான் செயல்படுகிறது. எனவே மொபைல் அல்லது லேப்டாப் அவசியம்.
  • நான்காவதாக முதலீடு, நம்முடைய வசதிக்கேற்ப நாம் முதலீட்டை தொடங்கலாம். நாம் செய்யும் முதலீட்டு தொகை அடிப்படையில் தான் நம்முடைய இலாபமும் அமையும்.

தீர்வு

இறுதியாக, ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. அனைத்தும் உண்மையானவை அல்ல. நிறைய ஏமாற்று வேலைகள் ஆன்லைனில் நடக்கிறது. இவற்றை நம்பி நாம் எதிலும் முதலீடு செய்து விட கூடாது. மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் நான் பயன்படுத்திய பின்னர் உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். இவற்றில் பிறர் சம்பந்தம் இல்லாமல் நீங்களே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். எனவே ஏமாற்றம் என்கிற அச்சம் இல்லாமல் நீங்களே வருமானம் ஈட்ட முடியும்.

Leave a Reply